லங்காவி தீவுக்கு 3000 பேர் வருவர்

தேசிய மீட்புத் திட்டத்தின் வழி பல தொழில் துறைகளை அரசு மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது. 3,000 சுற்றுப்பயணிகள் லங்கா விக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது லங்காவிக்கு சுற்றுலாச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், அங்குள்ள சுற்றுலாத் தலங்கள், பொருள் விற்பனைக் கடைகள் யாவும் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களாக லங்காவி தீவிற்கு வருகையாளர்கள் வருவது முற்றாகத் தடை பட்டபோது அங்குள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு, உரிமையாளர்கள் வருமானம் இன்றி, ஊழியர்களுக்குச் சம்பளம் தர முடியாத நிலையில் தவித்த வேளையில், இந்த அனுமதியானது விமோசனம் போலத் தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாடு மையமான லாடாவின் தலைமை செயல்முறை அதிகாரி அப்துல் முத்தலிப் கூறுகையில், இங்கு தொற்று பரவாமல் இருக்க வரையறுக் கப்பட்ட நெறிமுறைகளைச் சுற்றுப் பயணிகள் கட்டாயமாக அனுசரிக்க வேண்டும் என்றும் முடிந்தவரை கூடல் இடைவெளியை கட்டாயமாக பின்பற்றுவதே நல்லது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இங்கு வருவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்னதாகவே பதிந்து கொண்டிருந்தால், அதிகமான கூட்டம் சேருவதைத் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். புதிய வாழ்க்கை முறை எனும் நடைமுறையில் இங்கு வருவோர் சுயமாகவே வழக்க நடைமுறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லாங்விற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் குறைந்தது 3,000 பேர் விமானங்களின் மூலமும் ஆயிரக்கணக்கானோர் ஃபெர்ரியின் மூலமும் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கோலாலம்பூரிலிருந்து லங்காவிக்கு நாளொன்றுக்கு 12 விமானப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. கோல பெர்லிஸ் ஃபெர்ரி முனையம் செயல்பாட்டில் இருக்கும்போது, கோல கெடா ஃபெர்ரி முனையம் கோவிஸ்ட் தொற்றினால் மூடப்பட் டுள்ளது. அங்கிருந்து லங்காவிக்கு தற்போதைக்கு வர முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேவைக்கு ஏற்ப லங்காவிற்கு செல்லும் விமா னச் சேவை அதிகரிக்கப் படும். முதல் முயற்சியாக இங்கு வரும் பயணங்கள் குறைவான எண்ணிக்கை யில் இருந்து, தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உள்ளூர் சுற்றுப் பயணிகள் லங்காவியில் இருக்கும் பிர பலமான கழுகு சதுக்கம், லங்காவி கேபள் கார், அண்டர் வாட்டர் வேர்ல்ட் லங்காவி செனா ங் கடற்கரை ஆகிய இடங்களில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப் பிட்டார். லங்காவி தீவை சுற்றுப் பயணி களுக்குத் திறந்துவிட சுகாதார இலாகாவின், தேசிய பாதுகாப்பு மன்றம், சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் அனுமதியோடு அது திறந்து விடப்படுவதாக அவர் தெரிவித்தார். இங்கு வரு வோர் மிகவும் விழிப்புணர்வாக இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும் நோயை பரப்ப கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார் வரை யறுக்கப்பட்ட விதிமுறைகளை அவர் கள் அணுக்கமாக பின்பற்றினால் அது எல்லோருக்கும் பயனாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இங்குள்ள போலீசார் விதி முறைகளை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கின்றார்களா என்பதை அடிக்கடி பரிசோதித்து அதனை மீறுவோருக்கு நிச்சயமாக அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் வழி விற்பனை கடைகள் யாவும் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களாக லங்காவி தீவிற்கு வருகையாளர்கள் வருவது முற்றாக தடைபட்ட போது அங்குள்ள கடைகள் முழுவதும் அடைக்கப் பட்டு உரிமையாளர் வருமானம் இன்றி ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையில் தவித்த வேளையில், விமோசனமாக இச்செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − one =