ரோஹிங்யா விவகாரம் அரசாங்கம் கடுமையாக உள்ளது

0

ரோஹிங்யா அகதிகள் நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கடுமையாக உள்ளது என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இவர்களைத் திருப்பி அனுப்புவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதில் மலேசிய அரசாங்கம் உறுதியாக உள்ள வேளையில், இதை அமல்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர். பல நாடுகள் மனிதாபிமானத்தைப் பற்றிப் பேசுகின்றன. எனினும் இந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லாததால் ‘யூஎன்எச்சிஆர்’ என்ற ஐக்கிய நாட்டு சபையின் அகதிகளுக்கான ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவு அமைச்சை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
எங்களை அவர்கள் அதிகமாக விமர்சனம் செய்து வருவதால் மனிதாபிமானத்தை அவர்கள் உண்மையில் பேணும் பட்சத்தில் மலேசியாவில் உள்ள ரோஹிங்யாக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன் என்றார் அவர். இதற்கு முன்னர் மலேசியாவில் கிடைத்த நல்ல வரவேற்பு ரோஹிங்யா அகதிகள் மலேசியாவை தேர்ந்தெடுப்ப தற்கான காரணமாக அமையலாம் என்பதையும் தாம் மறுக்கவில்லையென்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 2 லட்சம் ரோஹிங்யா அகதிகளை, மலேசியாவை விமர்சிக்கும் நாடுகள் பகிர்ந்து ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இங்குள்ள ரோஹிங்யாக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்றும் இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 8 =