ரோஹிங்யாக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்; அல்லது தனி நாடு வேண்டும்

0

கோலாலம்பூர், ஜூலை 29-
ரோஹிங்யாக்கள் மியன்மார் நாட்டினராக கருதப்பட வேண்டும் அல்லது தங்கள் சொந்த மாநிலத்தை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று கூறினார்.
மலேசியா பொதுவாக மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றாலும், மியன்மாரில் நடக்கும் இனப்படுகொலை காரணமாக இந்த விஷயத்தில் அவ்வாறு செய்கிறது என்று அவர் கூறினார்.
மியன்மார், ஒரு காலத்தில் பல மாநிலங்களால் ஆனது. ஆனால் ஆங்கிலேயர்கள் மியன்மாரை ஒரு மாநிலமாக ஆட்சி செய்ய முடிவு செய்தனர் – அதன் காரணமாக, பல பழங்குடியினர் (பர்மா மாநிலத்தில்) சேர்க்கப்பட்டனர்.
ஆனால் இப்போது, நிச்சயமாக, அவர்கள் மியன்மார் நாட்டினராக கருதப்பட வேண்டும். அல்லது அவர்களுக்குத் தனி நாடு வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
2017-ஆம் ஆண்டில், 700,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்யாக்கள் ராகைன் மாநிலத்தில் இருந்து இராணுவத் தலைமையிலான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து விரட்டப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இனப் படுகொலைகள் மற்றும் கூட்டுக் கற்பழிப்புகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.
ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஜீத் ராஅத் அல் ஹுசைன் மனித உரிமைகள் பேரவையிடம், இந்த அத்தியாயம் இன அழிப்புக்கான எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், சீனாவில் உள்ள உய்குர்களின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க டாக்டர் மகாதீர், பேச்சுவார்த்தை, நடுவர் அல்லது நீதிமன்றத்தின் மூலம் மோதல்களைத் தீர்ப்பதற்கு மலேசியா எப்போதும் வாதிடுவதாக கூறினார்.
நாங்கள் சீனாவுக்குச் சொல்ல வேண்டும். தயவுசெய்து இந்த மக்களை குடிமக்களாக கருதுங்கள். அவர்கள் வேறு மதத்தைக் கொண்டுள்ளனர் என்பதால் பாகுபாடு காட்டக் கூடாது. நீங்கள் வன்முறையை நாடும்போது, ஒரு நல்ல முடிவைக் கண்டறிவது மிகவும் கடினம். ஏனென்றால் வன்முறை மூலம் குறிக்கோளை எட்டியதாக சரித்திரம் இல்லை, “என்று அவர் கூறினார்.இதற்கிடையில், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஃபெத்துல்லா பயங்கரவாத அமைப்புக்கு (குநுகூடீ) எதிரான துருக்கியின் போராட்டத்தில், டாக்டர் மகாதீர், மலேசியா எந்த நாட்டிலும் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றார்.
மற்ற நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மலேசியாவை ஒரு தளமாக பயன்படுத்தக்கூடாது என்பது எங்கள் கொள்கை. அந்த காரணத்தினால்தான் துருக்கிய அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாட்டிற்கான ஒரு தளமாக மலேசியாவைப் பயன்படுத்த சில முயற்சிகள் இருப்பதைக் கண்டறிந்ததால் இந்த ஃபெட்டோவோடு தொடர்புடைய பள்ளிகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளோம் “என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 20 =