ரோஸ்மா மன்சோரைக் கண்டு அரசு ஊழியர்கள் பயந்தனர்

அரசு ஊழியர்கள் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோரைக் கண்டு பயந்ததாக ரோஸ்மாவின் முன்னாள் உதவியாளர் ரிஸால் மன்சோர் இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
ரோஸ்மாவின் உத்தரவைப் பின்பற்றாவிட்டால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதுதான் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ரோஸ்மாவுடன் ஒருவர் சுமுகமான உறவு வைத்துக் கொண்டால் அவருக்கு அரசாங்கக் குத்தகைகள் அல்லது டத்தோ போன்ற உயரிய விருதுகள் கிடைப்பது எளிதாக இருக்கும் என அவர் சொன்னார். பல்வேறு காரணங்களால் அரசு ஊழியர்கள் மீது ரோஸ்மா மன்சோர் கூடுதல் அதிகாரம் எடுத்துக் கொண்டதாக அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் ரோஸ்மா மன்சோரின் சூரிய சக்தித் திட்ட ஊழல் வழக்கில் ரிஸால் மன்சோர் சாட்சியமளித்தார்.
ரோஸ்மா மன்சோர் பிரதமரின் முடிவைக் கட்டுப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், அவரை பிரதமரின் மூர்க்கத்தனமான மனைவியாக அரசு ஊழியர்கள் கருதி வந்ததாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 6 =