ரோஸ்மாவின் உதவியாளர் மீது வழக்குத் தொடரப்பட்டது

0

ரோஸ்மா மன்சோரின் முன்னாள் உதவியாளரான ரிசால் மன்சோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த விபரம் குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது ஜெய்னி மஸ்லானுக்கு துணை அரசு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம் நேற்று பிற்பகல் தெரிவித்திருந்தார்.
2018ஆம் ஆண்டில், ரிசால் சரவாக்கில் ஒரு சூரிய சக்தி செறிவூட்டும் (சோலார்) திட்டத்திற்கு தனக்காக ரிம.5.5 மில்லியன் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதே வேளையில் ரோஸ்மா மீதும் ரிம.189 மில்லியன் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்களின் வழக்குகள் இறுதியில் ஒன்றாகக் விசாரிக்கப்பட்டன.
இந்த சமீபத்திய வளர்ச்சி ரிசால் ஒரு வழக்கு சாட்சியாக மாறக்கூடும் என்ற ஊகங்களை உண்டாக்குகிறது.
அருள் கந்தசாமி 1எம்டிபி வழக்கில் முக்கிய சாட்சியாக மாறக் கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கை நீதிமன்றம் மீட்டுக் கொண்டது.
அருள் கந்தா மற்றும் நஜிப் இருவரும் 1எம்டிபி.யின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை மாற்றியமைத்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
அந்த நேரத்தில், நஜிப்பிற்கு எதிராக சாட்சியமளிக்க அருள் கந்தாவை கட்டாயப்படுத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2009இன் பிரிவு 63ஐ பயன்படுத்துவதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
அருள் கந்தாவின் வழக்கைப் போலன்றி, ரிசால் வழக்கின் வழக்குரைஞர்கள் பிரிவு 63ஐ மேற்கோள் காட்டவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + seven =