ரோன் விலை லிட்டருக்கு 5காசு வீழ்ச்சி கண்டது

0

பெட்டாலிங், ஜெயா, ஆக. 10-
ரோன் 97 பெட்ரோலின் விலை நேற்று நள்ளிரவு தொடங்கி லிட்டருக்கு 5 காசு குறைந்தது. இதன் மூலம் தொடர்ந்து 3 வாரங்களாக ரோன் 97 பெட்ரோலின் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது.
16 ஆகஸ்டு வரைக்கும் ரோன் 97 லிட்டருக்கு 2.49 வெள்ளி என விற்கப்படும்.
இதற்கிடையில் ரோன் 95 மற்றும் டீசலின் விலையில் மாற்றம் இருக்காது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. ரோன் 95இன் விலை லிட்டருக்கு 2.08 வெள்ளியாகவும் டீசல் லிட்டருக்கு 2.18 வெள்ளியாகவும் விற்கப்படும்.
மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க எரிபொருளுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருகிறது. வரும் 7 நாட்களுக்கு 59.28 மில்லியன் வெள்ளியை எரிபொருளுக்கான உதவிநிதியாக அரசாங்கம் வழங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =