ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி

0

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.

அதில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.3 சதவீதமாக தொடர்கிறது.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − five =