ரியோ கடற்கரையில் விண்வெளி வீரர்கள்? கொரோனாவில் இருந்து தப்பிக்க புதிய யுக்தி

0

கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டை புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பலர் விதவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த டெரிகோ ஹிலாடினோ (66) மற்றும் அல்சியா லிமா (65) தம்பதிகள் தங்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ரியோ கடற்கரைக்கு செல்லும்போது தனக்கும், மனைவி அல்சியாவுக்கும் கொரோனா பரவிவிடக்கூடாது என கருதிய ஹிலாடினோ விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஸ்பேஸ் சூட் எனப்படும் விண்வெளி உடையை வாங்கினார்.

விண்வெளியில் உடையில் தம்பதிகள்

உடலை மறைக்கும் வகையிலான உடைகளை வாங்கிக்கொண்டபோது முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையிலான தலைக்கவசத்தை அவர் சொந்தமாக உருவாக்கினார்.
பின்னர் இந்த விண்வெளி உடைகளை அணிந்து கொண்ட தம்பதியர் ரியோ கடற்கரைக்கு சென்று தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விண்வெளி உடையில் கடற்கரைக்கு வருவதாகவும், இந்த கடற்கரைக்கு வருபவர்கள் எங்களின் ஸ்பேஸ் சூட்டை பார்த்து புன்னகைத்தும், எங்களுடன் புகைப்படம் எடுத்து செல்வதாகவும் ஹிலாடினோ தெரிவித்தார்.

மேலும், இந்த உடைகளை அணிந்து கொண்டு ரியோ கடற்கரைக்கு வர முதலில் தனது மனைவி அல்சியா ஆச்சேபம் தெரிவித்ததாகவும், பின்னர் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதால் ஸ்பேஸ் சூட்டை அணிந்து கொண்டு கடற்கரைக்கு வர பின்னர் சம்பதம் தெரிவித்ததாகவும் ஹிலாடினோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + six =