ரிம. 1,200 குறைந்த பட்ச சம்பளம் கடுமையான விளைவை ஏற்படுத்தும்

0

குறைந்தபட்ச சம்பளமாக 1,200 ரிங்கிட்டாக அறிவித்த மனிதவள அமைச்சின் அறிவிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 2020 ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அந்த குறைந்தபட்ச சம்பளம் 42 நகர்களில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது. மேலும், அரசு இதழின்படி வெறும் 15 மாநகர் ஊராட்சிகள் மட்டுமே பதிவிடப்பட்டிருக்கும் வேளையில், 57 நகர்களில் அந்த ஆகக் குறைந்த சம்பளத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
அது குறித்து முதலாளிமார்கள் சம்மேளனத்தின் செயல்முறை அதிகாரியான சம்சுடின் பர்டான், தற்போது பல நிறுவனங்கள் வருமான சரிவினால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிடுகின்றன. விநியோகம் மற்றும் ஊடகத் துறைகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருவதாகவும், ஜெயன்ட் மற்றும் கோல்ட் ஸ்டோரெஜ் போன்ற நிறுவனங்கள் மூடப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வாண்டு செப்டம்பர் வரை 23,000 பேர் வேலையிழந்துள்ளனர்.
அந்த எண்ணிக்கை ஆண்டு இறுதிக்குள் 30,000ஐ எட்டும். இதில் வேலை செய்யும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களே அதிக லாபம் அடைவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்நிய நாட்டவர்கள் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை தங்கள் நாடுகளுக்கே அனுப்புவதால், உள்ளூர் மக்கள் அதனால் பயனடைய முடியாது. இந்த அதிகப்படியான சம்பளச் செலவுகள் பயனீட்டாளர்களின் மீதுதான் சுமத்தப்படும். அது பற்றிக் குறிப்பிட்ட மலேசிய வர்த்தக சங்க காங்கிரசான எம்டியூசியின் செயலாளரான ஜே.சோலமன் நகர்ப்புற தொழிலாளர்களுக்கும் புறநகர் தொழிலாளர்களுக்கும் வெவ்வேறு விதமான சம்பள விகிதாசாரம் காலத்துக்கு ஒவ்வாதது என குறிப்பிட்டார். அரசு அறிவித்த 1,200 ரிங்கிட் சம்பளம் தற்போதைய நிலைக்குப் போதாது. அதனை 1,800 ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டும் என சோலமன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here