ரிட்ஸுவானை கொண்டுவரும் நடவடிக்கை குழப்பமான ஒன்று

இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிட்ஸுவான் அப்துல்லாவையும் அவரது மகள் பிரசன்னா டிக்ஷாவையும் மலேசியாவிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை மிகவும் குழப்பமான ஒன்று என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் கூறினார்.
அதே வேளையில், இவர்களை நாட்டிற்குள் கொண்டுவர அதிக காலம் பிடிக்கலாம் என நேற்று இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பிரசன்னா டிக்ஷாவை வேறு நாட்டிற்குக் கடத்திச் சென்ற முகமட் ரிட்சுவானைக் கொண்டு வர ஓர் இடைத் தரகருடன் போலீஸார் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
மற்றொரு நாட்டில் இருந்து ரிட்ஸுவானை வலுக்கட்டாய மாகக் கொண்டு வருவதில் போலீஸார் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு எவ்வித நடவடிக்கையும் என்னால் எடுக்க முடியாது. மேலும் ரிட்ஸுவான் கடுமையான குற்றவாளி அல்லர்” என்றார் அவர்.
ஆகையால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வு காண நாங்கள் ரகசியமாக ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இந்தக் குழுவிற்கு ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையேற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + three =