ராஸ்வா பாஸ்டர் லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் 6 நிபந்தனைகள்

நாட்டை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றவில்லை என்றால் மக்கள் ஏழைகளாக தொடர்வார்கள். ஆகவே அதனை தடுப்பதற்கு பல ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் அது பயனளிக்கவில்லை. மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்துவதே ராஸ்வா பாஸ்டர் வஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஹிஷாமுடின் யாக்கோப் கூறினார். சினார் ஹாரியான் நாளிதழ் தலைவரான டத்தோ ஹிஷாமுடின் தலைமையில் 400 குழுக்கள் கொண்ட இந்த இயக்கம் அதற்காக 6 நிபந்தனைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும் என அவர் தெரிவித்தார். மேலும் ஊழல் தடுப்பு சட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவதில் அரசியல் சட்ட அமுல்படுத்துவதற்கு துரிதப்படுத்தப்பட வேண்டும். மலேசிய சூழலில் லஞ்ச ஊழல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சட்டத் துறைத் தலைவராக கட்சித்தாவல் தொடர்பான தடுப்பு சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். உண்டி 18 என்னும் பதினெட்டு வயதில் வாக்களிப்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளில் இந்நாட்டில் இளைய சமுதாயம் கட்டுப்பாடின்றி நம்பிக்கை கொண்டவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும். 2018ன் பொதுத்தேர்தலில் தேர்வு பெற்ற அரசாங்கம் இதுவரை மூன்று முறை மாறி உள்ளது. மூன்று பிரதமர்களை கொண்டிருந்தது. இது மிக கடுமையாக கருதப்பட வேண்டும் என சமூக அமைப்பின் தலைவரான சிந்தியா கெபிரியல் கூறினார். இதனைப்பற்றி கருத் துரைத்த மலேசியா அனைத்துலக வெளிப்படை கருத்து அமைப்பின் தலைவர் டாக்டர் முகமது மோகன் லஞ்ச ஒழிப்பு ஆணையம் நாடாளுமன்ற நிர்வாகத்தின் கீழ் செயல்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மேலும் மலேசிய நடவடிக்கை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பட்லிஷா ஷாம் பஹாரின் கருத்துரைக்கையில் நாடாளுமன்ற தேர்வு குழு கண்காணிக்க பொறுப்பினை ஏற்க வேண்டும். மேலும் அக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமனம் பெற வேண்டும். மேலும் அரசாங்கத்தின் துணை நிறுவனங்களில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். இதுவே லஞ்ச ஒழிப்பை முறை யாக கண்காணிப்பதற்கும் அமுல்படுத்துவதற்கும் ஒரு நல்ல செயல் முறையாகும். இவ்வியக்கத்திற்கு ஆதரவு வழங்க விரும்புவோர் hவவயீ://bவை/3உவஅஒளுல. அகப் பக்கத்திலும் மேலும் உங்களின் கருத்துக்களை வாட்ஸ்அப் எண் 019-3823635 இல் பதிவு செய்யலாம், அல்லது 019-6680920 எண்ணுடன் தொடர்புகொண்டு புகார் வழங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − three =