ராமசாமியை பற்றி எனக்கு கவலை இல்லை..!

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சொஸ்மா சட்டம் பயன்படுத்தப்பட்டது சரியே என்ற என் கருத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு வருத்தம் என்றால் அது பற்றி நான் கவலைப்படவில்லை என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.நாட்டில் மாறி வரும் சூழ்நிலைகள் காவல்துறை சொஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

பயங்கரவாதத்தை முறியடிக்கவே இந்தச் சட்டம். பக்காத்தான் அரசியல்வாதிகள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்தச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று பக்காத்தான் கூட்டணி நினைத்தது உண்மை தான். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால் இந்த சட்டத்தை பயன்படுத்தித் தானே ஆக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here