ராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி

மலேசிய கால்பந்து சங்கத்தின் கீழ் நடைபெற்ற ராஜராஜ தங்க கிண்ண கால்பந்து போட்டி 2019 கிண்ணத்தை மலேசிய இந்திய விளையாட்டு மன்றம் தட்டிச்சென்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு செராஸ் கால்பந்து அரங்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் மலேசிய இந்திய விளையாட்டு மன்ற அணி கோலாலம்பூர் மலாய்க்காரர்கள் கால்பந்து சங்க அணியை சந்தித்து விளையாடியது.

இந்த ஆட்டத்தின் முடிவில் 2 -1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று எம்ஐஎஸ்சி வெற்றிக் கிண்ணத்தை தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு சுழல் கிண்ணத்துடன் 40 ஆயிரம் வெள்ளி ரொக்கமும் வழங்கப்பட்டது.

மலேசிய இந்தியர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மலேசிய இந்திய விளையாட்டு மன்றம். மலேசிய கால்பந்து சங்கம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு எதிர்கால இந்திய விளையாட்டுகளை உருவாக்க வேண்டுமென்ற செயல் திட்டத்தை முன்னெடுக்கும் இந்த மன்றத்திற்கு இது மிகப் பெரிய வெற்றியாகும்.

இதுவரையில் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பதி கூறினார். கால்பந்து துறையில் இந்தியர்கள் ஆதிக்கம் குறைந்து வரும் காலகட்டம் எனக் கூறும் நிலையில் அதிகமான இந்திய விளையாட்டுகளை கொண்டுள்ள இந்த மன்றம் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 6 =