ரவுப் டுரியான் விவசாயிகள் எவரும் வாக்குமூலம் வழங்குவதற்கு அழைக்கப்படவில்லை!

ரவுப்பில் டுரியான் விவசாயி கள் மாநில நிலங்களில் ஊடுரு வல் செய்திருப்பதாகக் கூறப்படு வதைத் தொடர்ந்து விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டி ருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் அஸாம் பாக்கி கூறுகிறார்.
எனினும் யாரும் விசாரணைக்காக எம்ஏசிசிக்கு வரும்படி அழைக்கப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தி னார்.
நேற்று செவ்வாய்க்கிழமை யன்று உரிமம் இல்லாத 50 விவசாயிகள் எம்ஏசிசி அலுவல கத்திற்கு அழைக்கப்படுவர் என்று டுரியன் விவசாயிகள் குழு ஒன்று வெளியிட்ட அறிக்கைத் தொடர்பாக அவர் கருத்துரைத் தார்.
அந்த அறிக்கையில் எந்த உண்மையும் இல்லை என்று அஸாம் பாக்கி வலியுறுத்தினார். எனினும் சட்டத்திற்குப்புறம்பாக மாநில நிலத்தில் ஊடுருவல் தொடர் பாக பகாங் மாநில எம்ஏசிசி விசாரணை அறிக்கை களைத் தொடங்கியிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
மூசாங் கிங்கை காப்பாற்றும் அமைப்பு (சம்கா) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், ரவுப்பிலுள்ள உரிமம் இல்லாத 50 விவசாயிகளை எம்ஏசிசி தொடர்பு கொண்டுள்ள தாகவும் அவர்கள் எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்து வாக்கு மூலம் கொடுக்குமாறு அழைக் கப்பட்டிருப்பதாகவும் கூறியது.
எம்ஏசிசியின் இந்நட வடிக்கை அச்சுறுத்தும் செயல் என்று சம்கா வருணித்தது. விவசாயிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலங்களைச் சட்டபூர்வமாக்குவதற்கு சம்கா பகாங் மாநில அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டி ருப்பதாக சம்கா தனது அறிக்கை யில் கூறியது.
மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான ராயல் பகாங் டுரியான் மூலம் பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பதிலாக சம்கா நேரடியாகவே மாநில அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தவிரும்புகிறது.
காரணம் அந்த துணை நிறுவனம் வரியை விதிப்பதோடு மட்டுமல்லாமல் சந்தையில் விற்கும் விலையை விட குறைவான விலைக்கு கிரேட் ஏ மூசாங் கிங் டுரியான் களை அந்நிறுவனம் வாங்க விரும்புகிறது.
அத்தகைய டுரியான்களை வாங்கி, கொள்முதல் செய்வ தற்கு முழு உரிமையும் தங்க ளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று ராயல் பகாங் டுரியான் நிறுவனம் கோரிக்கை விடுத் திருக்கிறது என்று சம்கா அமைப்பு கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =