ரமலான் விளம்பர நன்கொடையாக ரிம 127,866ஐ பெற்றது சன்கியூக் நிறுவனம்

0

மலேசியா சன்கியூக் நிறுவனம் தனது அண்மைய ரமலான் விளம்பரத்தின்போது சேகரிக்கப்பட்ட மொத்த நன்கொடைகளை நேற்று அறிவித்தது. மலேசியா சன்கியூக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் ஆதறவோடு, இந்நிதி ஆதறவற்றோர் இல்லத்திற்காக சேகரிக்கப்பட்டது.
ஏப்ரல் 23 முதல் மே 24 வரை நிகழ்ந்த ரமலான் முன்முயற்சி திட்டத்தின் வழி, இந்த நிதி வசூலிக்கப்பட்டதோடு வாடிக்கையாளர்களுக்கிடையே ஒற்றுமையையும் வளர்க்க முடிந்தது என்று மலேசியா சன்கியூக் நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.“மலேசியா சன்கியூக் நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளரின் நலனுக்கும் முன்னுரிமை வழங்கி வருகின்றது. வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு சன்கியூக் பானம் பெரிதும் உதவுகின்றது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மலேசியா சன்கியூக் நிறுவனத்தின் உற்பத்தியாளரான பர்கத் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ பர்கத் அலி கூறுகையில், “மலேசிய குடும்பங்களில் ஒரு பழக்கமான பிராண்டாக சன்கியூக் வளர்ந்து வருகிறது என்றார். பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் சமூகத்தை பாதுகாப்பதில் அவர்கள் செய்த பங்களிப்புக்காக எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்“
“மலேசியாவில், 2010லிருந்து 2019 வரை கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 64 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நம் நாட்டில் அதிகரித்து வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் செய்யப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருணை ஆகிய நாடுகளுக்கு சன்கியூக் பானத்தை விநியோகிக்கும் பர்கத் குழும நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
மலேசியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழ சுவைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கி வருகிறது பர்கத் நிறுவனம். ஆகஸ்டில் குழுவின் 80மாவது ஆண்டுவிழாவை நினைவுகூரும் வகையில், இந்த திட்டம் நிகழ்த்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =