ரமலான் சந்தைகள் நடத்தக்கூடாது

0

கோவிட்-19 வைரஸ் தாக்க காலத்தில் ரமலான் சந்தைகள் நடத்தக் கூடாது என ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ஆணையிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் புதிய கோவிட்-19 தொற்று சம்பவம் அடையாளம் காணப்பட்டு வருவ தால் மக்கள் கூடும் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றார் அவர்.
இந்த கொடூர வைரஸ் பரவுவதை முறியடிக்கும் இலக்கை நாம் அடைய வேண்டும். அதே வேளையில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
நாடு மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடமாட்டக் காட்டுப்பாடு உத்தரவுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஜொகூர் மக்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்த காலகட்டத்தில் அரசியலை மறந்து விட வேண்டும். கோவிட்-19 கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார் அவர்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதி வரை அரசாங்கம் நீடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =