ரப்பர் பயன்பாடு சரிவைக் கண்டுள்ளது

மலேசியாவில் ரப்பரின் உற்பத்தி அதிகமாக இருந்த போதிலும், ஏற்றுமதி செய்யப்பட்ட ரப்பரின் எண்ணிக்கையும், உள்நாட்டில் ரப்பர் பயன்பாட்டின் எண்ணிக்கையும் சரிவைக் கண்டுள்ளன.
புள்ளிவிவரத் துறையின் தகவல்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 44,543 டன் வரை ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இது முந்தைய மாதத்தை விட 6.6 விழுக்காடு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு முந்தைய மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட ரப்பரின் எண்ணிக்கை 45,386 டன்னிலிருந்து 6சதவீதம் குறைந்து 42,658 டன்னாக குறைந்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்டதில் உள்நாட்டில் ரப்பரின் பயன்பாடு முந்தைய மாதத்தைவிட 0.6சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ரப்பர் கையுறை தொழிற்துறை உற்பத்தியின் 76சதவீதம் உள்நாட்டில் ரப்பர் பயன்பாட்டின் எண்ணிக்கையை குறிக்கின்றது என்று புள்ளிவிவரத் துறை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − one =