ரப்பரின் பயன்பாட்டை அதிகரிக்க மலேசிய ரப்பர் சங்கம் பல திட்டங்களை எடுத்து வருகின்றது

உலகளாவிய நிலையில் ரப்பரின் பயன்பாட்டை அதிகரிக்க மலேசிய ரப்பர் சங்கம் பல திட்டங்களை செய்து வருகின்றது. இவ்வாண்டு ரப்பர் பயன்பாட்டின் எண்ணிக்கை 12.61 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது.
இது 2019ஆம் ஆண்டின் ரப்பர் பயன்பாட்டின் எண்ணிக்கையை விட 8.4 விழுக்காடு சரிவினை காட்டுகின்றது.
உலகளாவிய நாடுகளில் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி மற்றும் சீனாவில் அதிவேகமான பொருளாதார மீட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆண்டின் மீதமுள்ள நான்கு மாதங்களில் ரப்பரின் பயன்பாட்டை சிறப்பாக செயல்படுத்தினால், ஆண்டுக்கு 1.8 விழுக்காடு குறைவு மட்டுமே ஏற்படும் என்று மலேசிய ரப்பர் சங்கம் எதிர்பார்க்கின்றது.
ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான கண்ணோட்டத்தில் ரப்பர் பயன்பாட்டின் எண்ணிக்கை 12.61 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது.
இது கடந்த 2019ஆம் ஆண்டினை விட 8.9 விழுக்காடு வீழ்ச்சியைக் குறிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான உற்பத்தியில் 8.7 விழுக்காடு சரிவு ஏற்பட்டு ஆண்டுக்கு ஆண்டு 7.78 மில்லியன் டன்னாக குறைந்துள்ளதைத் தொடர்ந்து மீதமுள்ள நான்கு மாதங்களில் 3.8 விழுக்காடு சரிவு மட்டுமே ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2020இல் இயற்கை ரப்பரின் விலைகள் வெவ்வேறு தரம் மற்றும் வெவ்வேறு சந்தைகளில் மாறுபட்ட அளவுகளில் மேலும் மேம்பட்டுள்ளதாக மலேசிய ரப்பர் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =