ரபிஸியின் வழக்கு குறித்து சட்டத்துறைத் தலைவருடன் நான் பேசவில்லை

0

பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லியின் விடுதலை குறித்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை தேர்தல் ஆணையத் தலைவர் அஸஹார் அஸிஸான் ஹருண் மறுத்துள்ளார்.
“ரபிஸியின் வழக்கு குறித்து சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் அல்லது சட்டத்
துறைத் தலைவரின் அலுவலகத் தைச் சேர்ந்த எந்தவோர் அதிகாரியுடனும் நான் பேச்சுவார் த்தை நடத்தவில்லை” என்றார் அவர். கடந்த நவம்பரில் என்எப்சி வழக்கு விசாரணையில் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் ரபிஸியை விடுதலை செய்தது.
இந்த விடுதலையை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல் முறையீடு செய்தது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் மேலும் கூறியிருந்தார்.
அதே வேளையில், ரபிஸியின் விடுதலை குறித்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று தேர்தல் ஆணையத் தலைவர் அஸஹாருடன் தாம் பேச்சுவாத்தை நடத்தப்போவதாக டோமி தோமஸ் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 9 =