ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்

ஜெயம் ரவி ஜோடியாக பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால், அவர் கோபமடைந்துள்ளார். நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இதனால் கோபமடைந்த நிதி அகர்வால், இதுகுறித்து கூறியதாவது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை பார்க்கிறேன். அந்த புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 19 =