யூபிஎஸ்ஆர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஸ்ரீ முருகன் நிலையம் கௌரவப்படுத்தியது

0

யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்த 37 மாணவர்களுக்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் பரிசுகள் வழங்கி பாராட்டியது.
இதனிடையே, 6ஆம் ஆண்டு முடித்து படிவம் 1க்குச் செல் லும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிந்ததும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழியில் கதை எழுதும் மாபெரும் போட்டியை நடத்தியது. இவற்றில் 183 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் சிறந்த மூன்று கதைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஆங்கிலத்தில் கதை எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற தர்வினி மதிவாணன் எனும் மாணவிக்கு 300 வெள்ளி ரொக்கம், மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாவது நிலையை அடைந்த வைணாவி எனும் மாணவிக்கு 200 வெள்ளி ரொக்கம், சம்சுங் டேப் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மூன்றாம் நிலை வெற்றியாளரான ரூபணா கோகிலனுக்கு 100 வெள்ளி ரொக்கம், கைக்கடிகாரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்மொழியில் கதை எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற பிலிசியா லெமின்டாஸ் எனும் மாணவிக்கு 300 வெள்ளி ரொக்கம், மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாவது நிலையை அடைந்த சிந்தூரன் எனும் மாணவனுக்கு 200 வெள்ளி ரொக்கம், சம்சுங் டேப் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மூன்றாம் நிலை வெற்றியாளரான மிதோஸ் தங்கவேலுக்கு 100 வெள்ளி ரொக்கம், கைக்கடிகாரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவற்றில் ஆறுதல் பரிசுகளை பெற்ற 12 மாணவர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள போப்புலர் புத்தகக்
கடையின் பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட
துடன் கலந்து கொண்ட அனைவருக்
கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக சிறந்த படைப்புகள் வழங்கிய பள்ளி க்கு 100 வெள்ளி அன்பளிப்பு வழங் கப்பட்டது. டான்ஸ்ரீ டாக்டர் தம்பி
ராஜா தலைமையில் நடந்த இந்நிகழ்
ச்சி யில் டத்தோ புரவியப்பன், டத்தோ காசி, பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீமுருகன் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளர் அசோக், இந்துமதி உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here