யூஇஎம் சன்ரைஸ் பெருநாள் சிறப்பு விற்பனை ஜூன் 30-இல் முடிவுறும்

யூஇஎம் சன்ரைஸ் வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனம் கோலாலம்பூர் அருகிலுள்ள ஸ்ரீ கெம்பாங்கனில் 19.24 ஏக்கர் வீடமைப்பு திட்டம் மேற்கொள்ள உள்ளது. ஜாலான் ஈக்குவின் வட்டாரத்தில் ஈக்குவின் பார்க் வீடமைப்பு திட்டம் அமையவுள்ளது. அங்கிருந்து கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் மற்றும் ஆயர் ஈத்தாம் காட்டுப்பகுதியை பார்க்கலாம். இத்திட்டத்தில் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு ஹரி ராயா அன்பளிப்பாக ரிம 5,888 பரிசாக பெறலாம். “ ரீயாங் ரீயா ராயா சேரியா” எனும் இத்திட்டத்தில் பதிவும் அதற்கான சிறப்புமிக்க சலுகைகளும் வரும் ஜூன் 30ஆம் தேதி முடிவடையும் என யூஇஎம் தலைமை வர்த்தக அதிகாரி கென்னி வோங் தெரிவித்தார். ஜொகூரில் உள்ள இந்நிறுவனத்தில் பதிவு செய்பவர்களுக்கு ரிம 2,000 முதல் ரிம 10,000 வகையிலான அதிர்ஷ்ட குலுக்கில் ஹபீப் நகை நிறுவன பற்றுச் சீட்டுகளை பரிசாக வெல்லலாம். இந்த காலக்கட்டத்தில் மத்திய மற்றும் தென் வட்டாரத்தில் உள்ள 13 கவர்ச்சியான மேம்பாட்டு திட்டங்கள் விற்பனைக்கு இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =