யார் யாருக்கு மித்ரா மானியம்? பகிரங்கப்படுத்தப் பட வேண்டும்!

பிரதமர் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மித்ரா இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக அமைக்கப் பட்டது. அந்த வகையில் மித்ரா மானியம் எந்தெந்த இந்திய அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது என்பது பொது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் சமூகநல கல்வி இயக்கத் தலைவர் மா.லோகநாதன் குறிப்பிட்டார். டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக செடிக் உருவாக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அதற்கு 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது பின்னர் 2019, 2020 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பக்காத்தான் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங், மித்ரா என்று பெயர் மாற்றம் கண்ட செடிக்கிற்கு தலா 10 கோடி வெள்ளி ஒதுக்கினார். தற்போது பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் சார்பிலும் 2021 பட்ஜெட்டில் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் 10 கோடி வெள்ளி மானியத்தை அறிவித்தார். பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா மித்ராவை கண்காணித்து வருகிறார். மித்ரா மானியங்கள் எந்தெந்த அமைப்புகளுக்கு வழங்கப் படுகின்றன என்பதை பகிரங்க மாக அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே மித்ராவின் கீழ் நாட்டில் 32க்கும் மேற்பட்ட பாலர்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். இவர்களு க்கு சில மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்ற புகாரைத் தாம் பெற்றிருப்பதாக லோகநாத குறிப்பிட்டார். இது உண்மைதானா என்பதை மித்ரா தெளிவுபடுத்த வேண்டும் லோகநாதன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − two =