யார் துரோகி? மஇகாவுக்கு ஐபிஎப் கேள்வி

ம.இ.கா தேசிய தலைவர் டான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறுவது போன்று ஐ.பி.எப் கட்சி யாருக்கும், எந்த கட்சிக்கும் துரோகம் இழைத்தது இல்லை மாறாக அனைவருடனும் நட்புறவோடு தான் இருக்கின்றோம். 1993 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை பொதுத் தேர்தலிலும், இடைத் தேர்தல்களிலும் தேசிய முன்னணியின் ம.இ.கா உட்பட அனைத்து கட்சிக்கும் ஐ.பி.எப் கட்சி வற்றாத ஆதரவை வழங்கியுள்ளது. இது தேசிய முன்னணி கட்சிகளுக்கும் தெரியும். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அறியும் யார் உண்மையான துரோகி? என்று. 1.12.1988 அன்று ம.இ.கா.விலிருந்து புரட்சித் தலைவர், இளம் சிங்கம் டான் ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனை தூக்கி எறிந்தது யார்?? அதனை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட ம.இ.கா. கிளைத்தலைவர்களை வெளியேற்றியது யார்? 1989 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் கட்சித் தேர்தலில் வெற்றி பெற தந்திரமாக டான் ஸ்ரீ எம்.ஜி. பண்டிதனின் ஆதவாளர்களை ம.இ.கா.விலிருந்து ஒழித்து கட்டியது யார்? இப்படி எல்லா துரோங்கங்களையும் செய்தது ம.இ.கா.வும் துன் சாமிவேலுவும் தான் டிசம்பர் முதலாம் தேதி அன்று இரத்தம் சொட்டச் சொட்ட ம.இ.கா. கட்டட வளாகத்திலிருந்து ஈவு இரக்கம் இன்றி அடித்து விரட்டியடித்து யார்?

ஆனால் இன்று நம்மை பார்த்து துரோகி என்று குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.யார் துரோகி என்று சற்று சிந்தித்து பேசுமாறு ம.இ.கா. தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனை அன்புடன் கேட்டு கொள்கிறோம்.துன் சாமிவேலு செய்த தவற்றை தாங்களும் செய்ய வேண்டாம். துன் சாமிவேலு செய்த துரோகத்திலிருந்து நாங்கள் இன்னும் மீண்டு வர முடியாமல் இருக்கிறோம். டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் தொடர்ந்து எங்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம். ம.இ.கா வின் கதவை பல முறை தட்டியும் டான்ஸ்ரீ எம். ஜி. பண்டிதன் மற்றும் அவர்தம் ஆதரவாளர்களுக்கு ம.இ.கா கருணை காட்டாத நிலையில் தன் அரசியல் வாழ்வுக்கு வழி அமைக்கும் நிலையில் ஐ.பி.எப் கட்சி தொடங்கி செமாங்காட் 46 கூட்டணியில் இணைந்து போட்டி போட்டதை துரோகம் என்று எப்படி கூறுவது. அன்று ம.இ.கா டான்ஸ்ரீ பண்டிதனை மீண்டும் இணைத்து இந்நிலை ஏற்பட்டிருக்காது. கடந்த 28 ஆண்டுகளாக ஐ.பி.எப் கட்சி தேசிய முன்னணியின் ம.இ.கா. உட்பட அனைத்து கட்சிக்கும் விசுவாசமாக செயல் படுவதை முன்னிறுத்தி தேசிய முன்னணியில் உறுப்பு கட்சியாக இணைவதை தடுக்கும் ம.இ.காவின் செயலை என்னவென்று கூறுவது?ஐ.பி.எப் கட்சி ஒரு போதும் யாருக்கும் , எந்த காலத்திலும் துரோகம் இழைத்தது இல்லை என்று ஐ.பி.எப் கட்சியின் தேசிய தலைவர் கொண்டிருந்தால் டி.லோகநாதன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − eight =