யாரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்!

0

“யாரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்” என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று அடிப் சியான் அப்துல்லா கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது இவ்வாறு கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர் மாநிலத்தின் தலைவரான அமிருடின், நாட்டின் சட்ட எல்லைகளுக்குள் யாவரும் செயல்பட வேண்டும் என்றார்.
இது குறித்து சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார் “இந்தச் சம்பவம் உண்மையா இல்லையா என்பதையும், அதன் விளைவுகள் குறித்து அதிகாரிகள், குறிப்பாக காவல் துறையினரிடமிருந்து மேலதிக அறிக்கைகளையும் பெற வேண்டும்.”
“அறிக்கைக்குப் பிறகு … நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்.”
“நம் நாட்டில் எந்த மனிதனும் சட்ட திட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. எல்லோரும் சட்டத்தின் எல்லைக்குள் செயல்பட வேண்டும்.”
“ஒரு மனிதரின் தனிப்பட்ட விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் அவர்கள் விதிகளை மீறினால், பக்காத்தான் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”
தாம் நேரடியாக அடிப் ஷானைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், மாறாக பெர்சத்துவின் உச்சமன்றமே அவர் கைது செய்யப்பட்ட தகவலை உறுதிப்படுத்தியதாகவும் அமிருடின் தெரிவித்தார். அவர் இவ்விவகாரத்தில் ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப்பட்டால் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டதற்கு, அமிருடின் இந்த விவகாரம் குறித்து கட்சி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 1 =