ம.இ.காவுக்கு பாடம் கற்றுத்தர நினைத்தவர்கள் சுங்கை சிப்புட் மக்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தந்து விட்டார்கள்

0

ம.இ.காவுக்கு பாடம் கற்றுத் தர வேண்டும் என்று நினைத்தவர்கள் சுங்கை சிப்புட் மக்களுக்கு பாடம் கற்றுத் தந்து ம.இ.கா குறித்து தெளிவு பெறச் செய்து விட்டதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
சுங்கை சிப்புட் மக்களுக்கு ஏமாற்றங்கள் தெரிகிறது. உண்மையில் யார் உதவி செய்வார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ம.இ.கா மட்டுமே அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளதாக பழைய கிள்ளான் சாலையில் கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். மக்களுக்கு சேவை வழங்குவதில் ம.இ.கா முதலிடம் வகிக்கிறது என்றால் அது மிகையில்லை. மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் சக்தியும் பலமும் ம.இ.காவிடம் உள்ளது. வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடா ளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அரசாங்கம் அமைப்பதில் தோல்வியை தழுவினாலும் மக்களுக்கு சேவை செய்வதை மஇகா நிறுத்தாது. ம.இ.கா மக்களை ஒரு போதும் கைவிட்டதில்லை. சுங்கை சிப்புட் தொகுதியில் வெற்றி பெற்றால் கல்வி, பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு ம.இ.கா கண்டிப்பாக உதவி வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுங்கை சிப்புட் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதில் குறிப்பாக இந்திய மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீட்டுப் பிரச்சினை, வேலை பிரச்சினை, கல்வி பிரச்சினை, தனித்து வாழும் தாய்மார்கள் பிரச்சினை, முதியோர்களை கவனிக்கும் பிரச்சினை என்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
சுங்கை சிப்புட்டில் வேலை வாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் வெளியில் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், சுங்கை சிப்புட்டில் வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இந்தியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலாய்க்காரர்கள், சீனர்கள் ஆகியோரும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
சுங்கை சிப்புட் தொகுதியை பொறுத்தவரையில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் என்று அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் பாகுபாடு இல்லாமல் தீர்வு காணப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =