மோரிப் கடலோரம் அலை மோதிய கூட்டம்… கண்காணிப்பு நடவடிக்கையில் அமலாக்க அதிகாரிகள்

நாட்டின் முக்கிய உல்லாசத் தளங்களில் ஒன்றான மோரிப் கடலோரம் மக்கள் வெள்ளம் அலை மோதியது. இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அவர் களைக் கண்காணிக்கும் பணியில் அமலாக்க அதிகாரிகள் களத்தில் இறங்கி னர். நேற்று முன்தினம் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் இந்தக் கடற்கரைப் பகுதியில் மக்கள் கூடத் தொடங்கினர். தொற்று ப் பரவல் அதிகரித்து வரும் இவ்வேளையில் இப்பகுதியில் இவர்கள் எஸ்ஓபியை சரி வர கடைப் பிடிக்கிறார் களா? முறையாக முகக் கவசம் அணிந்துள்ளனரா? என்ற கண்காணிப்பு நடவடிக்கையில் 8 பேர் அடங்கிய குழுவினர் ஆளுக்கொரு பக்கம் சென்று கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டதாக இப்பணிக்குப் பொறுப் பேற்ற துவான் ஹாஜி மஸ்லான் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இப்படி ஒரே இடத்தில் அதிகமான கூட்டம் இருந்தால் அதனால் பாதிப்பு கள் அதிகரிக்கக் கூடும் என்று அவர் கூறினார். இந்தக் கூட்டத்தைக் கண்காணிக்க காவல் நிலையத்தில் இருந்து நால்வரும் கோலலங்காட் நகராண்மைக்கழக த்தின் அமலாக்க அதிகாரிகள் நால்வரும் பணியில் அமர்த்தப் பட்டனர். இவர்கள் மோரிப் கடலோரம் மக்களின் நடவடிக்கை களை மாலை வரை இருந்து கண்காணித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =