மோரிப் கடற்கரையில் ஆடிப் பெருக்கு விழா

பன்னெடுங்காலமாக இங்கு மோரிப் கடற்கரையில் கடல் விழா என்றழைக்கப்படும் ஆடிப் பெருக்கு விழாவுக்கு இவ்வாண்டு மாநில அரசின் கீழ் செயல் படும் கோலலங்காட் நகராண்மைக்கழகம் மற்றும் காவல் துறையும் அனுமதி தருமா? இல்லை மறுக்கப்படுமா? என்று சமய ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் அதாவது ஆடி மாதம் 18 ஆம் தேதி இந்தக் கடற்கரைப் பகுதியில் இந்தியர்களின் பாரம்பரிய சமய விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். மாநில அளவில் மக்கள் திரண்டு வருவார்கள். புதுமணமக்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளைக் கடலில் கொண்டு விட்டு நீராடி பின்பு புத்தாடை அணிந்து இங்கு நடைபெறும் பூஜை புனஸ்காரங்களில் கலந்து கொள்வர்கள். பூஜைக்குப் பின் மணமக்கள் பெற்றோர் பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவார்கள். காலம் காலமாக இங்கு நடை பெற்று வரும் இந்த விழா இவ்வாண்டு நடைபெறும் சாத்தியம் இல்லை என்று சிலர் கூறி வருகின்றனர். காரணம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பால் அரசு இதற்கு அனுமதி வழங்குமா? என்பது இன்னமும் கேள்விக் குறியாக வே உள்ளது. கடந்த ஆண்டில் அனுமதி வழங்கிய அரசு மக்கள் எஸ்ஓபியைப் பின்பற்றி செயல்படும்படி அறிவுறுத்தியது. பாதுகாப்பு க்கு காவல் துறை யினரும் இப்பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். மக்களும் முகக் கவரிகள் அணிந்து சமூக இடை வெளி யைக் கடைப்பிடித்து விழாவில் கலந்து கொண்டனர். ஆயினும் இவ்வட்டாரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் நடத்த அனுமதி வழங்க ப்படவில்லை. இந்த நிலையில் வரும் 3.8.2021 அன்று மக்கள் மோரிப் கடற் கரைப் பகுதிக்குச் சென்று பூஜை புனஸ்காரங்களோடு ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாட முடியுமா? இதற்கு அரசு அனுமதி வழங்குமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =