மோரிப் கடற்கரைக்கு வருவோர் முகக்கவசங்களை கண்ட இடங்களில் வீச வேண்டாம்

0

இங்கு மோரிப் கடற்கரைக்கு மாலை நேரங்களில் வார இறுதி நாட்களில் பொழுதைக் கழிக்க வருவோர் தாங்கள் அணிந்து வரும் முகக்கவசங்களை அலட்சியமாக அங்கு மிங்கும் வீச வேண்டாம்.
அது சுற்றுப்புறத்தூய்மைக் கேட்டுக்கு காரணமாக இருப்ப தோடு, அது பொது மக்களின் சுகாதாரத்திற்கு மருட்டலாக அமைந்து விடக்கூடுமென நேற்று முன்தினம் (13.9.2020) மோரிப் கடற்கரை துப்புரவுப் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கோல லங்காட் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அமிருல் அஸிஸான் எச்சரித்தார். சேகரித்த குப்பைகளில் அதிகமான முகக்கவசங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கி வரும் கோவிட் – 19 தொற்றில் இருந்து அனைவரும் முற்றாக விடுபட இது போன்ற அபத்தமான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார். மாநகர் மன்றத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற மேன்மை தங்கிய சுல்தான் ஷராப்புடின் இட்ரிஸ் ஷாவின் புதல்வியான, இளவரசி தெங்கு டத்தின் படுகா செத்தியா சாதாஷாவுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். மாநில தன்னார்வ சேவை யாளர்கள் மாநகர் மன்ற அதிகாரிகள், மோரீப் சட்டமன்ற இளைஞர்கள் வழங்கிய சேவையை டத்தோ அமிருல் வெகுவாகப் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − nine =