மோசடி கும்பலிடம் 79,600 பணத்தைப் பறிகொடுத்த குடும்பமாது; தெலுக் இந்தானில் பரபரப்பு!

(டிகே.மூர்த்தி)
தெலுக் இந்தான், ஜூன் 11-
கடந்த 4-6-2021/6-6-2021 ஆகிய இருநாட்களில் குடும்பமாது (வயது 51) ஒருவர் பணம்பறிக்கும் மோசடி கும்பலின் பேச்சை நம்பி 79,600 வெள்ளி இழந்துள்ளார். மிரி சபா மாநிலத்தில் இருந்து 08845422 தொலைபேசி எண்கள் மூலம் அறிமுகம் இல்லாத சந்தேக நபர் அந்த குடும்ப மாதுவை தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.
தன்னை சபா மிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிகொண்ட சந்தேக நபர், அந்த குடும்ப மாதுவிடம் பணம் பறிக்கும் மோசடி நோக்கத்தில், அவரை பிரச்சினையிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர். இது இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இருந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பமாது தெலுக் இந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் என மாவட்டக் காவல் துறை தலைவர் ஏசிபி அகமது அட்னான் செய்தியாளர்களிடம் பேசினார். மோசடி கும்பலைச சேர்ந்த அந்த சந்தேக நபரின் 01112715059 கைபேசி எண்களுடன் போலீசார் தொடர்புகொள்ள முடியவில்லை. காரணம் அந்த கைபேசி எண்கள் போலியானது என கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், தலைமறை வாகிவிட்ட அந்த சந்தேக நபர்கள் காவல் துறையினரால், தேடப்பட்டு வருகின்றனர் என்றும் அட்னான் குறிப்பிட்டார்.
அந்நிலையில், புகார்தாரர் தனது பொருளக சேமிப்பு கணக்கிலிருந்து, கடந்த 06-06-2021 இல் மொத்தம் 65,000 வெள்ளி மீட்டுள்ளார். அந்த மோசடி சந்தேக நபர் கேட்டுக் கொண்ட பணம் பற்றாகுறையினால், புகார்தாரர் சக நண்பர்களிடமிருந்து மேலும், 14,600 வெள்ளியை கடனாகப் பெற்றுள்ளார். தெலுக் இந்தான் பொருளகப் பணம் பட்டுவாடா இயந்திரத்தின் மூலம் 79,600 வெள்ளியை MOHAMAD RUZAIMA மற்றும் LIDYAWATI என்னும் CIMB பொருளக கணக்கில் இருவர் பெயருக்கு அப்பணத்தை அனுப்பி வைத்துள்ளார் என்றும் ஏசிபி அட்னான் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர் தாமான் தெலுக் இந்தானில் வசிக்கின்றார். அவர் இங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் அலுவலராகப் பணி புரிகின்றார்.
மேலும், இது போன்று பணமோசடிக் கும்பலிடம், பொதுமக்கள் விழிப்பாகவும் இருத்தல் மிக மிக அவசியமும் கட்டாயமுமாகும். எந்த சூழலிலும் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்பேசியை நிராகரிப்பதின் மூலம், அந்த மோசடி கும்பலின் சதி திட்டம் முறியடிக்கப்படும். அந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு தயங்காமல், முன்வரவேண்டும் என்று ஓசிபிடி அட்னான் கேட்டுக் கொண்டார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் உள்ளனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − four =