மொஹிடினுக்கு பெர்சத்து இளைஞர் பிரிவு ஆதரவு வழங்காது – சைட் சாடிக்

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள மொஹிடின் யாசினுக்கு பெர்சத்து இளைஞர் பிரிவு ஆதரவு வழங்காது என அதன் இளைஞர் பிரிவு தலைவர் சைட் சாடிக் சைட்ட அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.

லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றவோ அல்லது அவர்களுடனான அரசாங்கத்தில் சேர்ந்து பணியாற்ற தாம் தயாராய் இல்லையென காணொளி மூலம சைட் சாடிக் தெரிவித்துள்ளார். பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொஹிடினுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இன்று காலை இஸ்தானா நெகாரவில் பேரரசரை சந்திக்கவிருக்கின்றனர். மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சாடிக் இன்று காலை மணி 8.05 அளவில் டிவிட்டரில் அந்த வீடியோவை வெளியிட்டார்.

லஞ்ச ஊழல்வாதிகளைக் கொண்ட கட்சி அல்லது அவர்கள் அமைக்கும் அரசாங்கத்துடன் தாம் இணைந்து பணியாற்ற முடியாது என சைட் சாடிக் தெரிவித்தார். இது கட்சி அல்லது பெரும்பான்மை கிடையாது. இது அடையாளம் மற்றும் நேர்மையை கொண்டதாக உள்ளது என அவர் சொன்னார்.  எனது இந்த முடிவை சில அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள் என்று எனக்கு தெரியும்.ஆனால் அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள், நாட்டின் உண்மையான எஜமானர்கள் மக்கள் என அவர் சொன்னார்.

அந்த வீடியோவில் பிரதமர் பதவிக்கு மொஹிடினுக்கு ஆதரவு வழங்குவதாக அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் மொஹிடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து சைட் சாடிக் வெளியேறிவிட்டார் என்பது தெளிவாகிறது.

மொஹிடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் சத்திய பிரமான கடிதத்தில் தான் கையெழுதிடவில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =