மொறு மொறுப்பான சிகப்பு அவல் பக்கோடா

தேவையான பொருட்கள்

சிகப்பு அவல் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
மிளகாய்த்தூள் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1

சிகப்பு அவல் பக்கோடா

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிகப்பு அவலை சுடுநீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது ஆறியபின் அவலை ஓரளவு பிசைந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கொத்தமல்லி இவற்றைக் கலந்து கொள்ளவும்.

இதில் சிறிது எண்ணெயைக் காயவைத்து அதன் மேல் ஊற்றி அத்துடன் மிளகாய்த்தூள் சிறிதளவு சேர்த்து தேவைப்பட்டால் இரண்டு மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்த பிறகு இந்த மாவை உதிரி உதிரியாகப் போட்டு சிவக்கப் பொரித்தெடுக்க வேண்டும்.

பின்பு அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்து எடுத்து அவல் பக்கோடாவின் மேல் கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது மொறு மொறுப்பான கரகரப்பான, சுவையான சிகப்பு அவல் பக்கோடா ரெடி.

காற்று புகாத டப்பாவில் இந்த பக்கோடாவைப் போட்டு வைத்தால் பத்து நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =