மை செஜாத்ராவில் தொழில் நுட்பக் கோளாறு; 2ஆவது பூஸ்டர் ரத்து

Users will now see three new tabs on the app’s homepage, namely Covid-19 Self Test, Emergency, and Health Facilities. — ANGELIN YEOH/The Star

மை செஜாத்ரா செயலியில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியும் பெரியோர்களுக்கான இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியும் ரத்து செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிகள் 18 வயதானோருக்கு மட்டுமே தரப்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் கொள்கையாக இருப்பதாகவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியும் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் அளிக்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
17 வயதுக்கும் குறைவானோருக்கு இரண்டாவது தடுப்பூசிக்காக விண்ணப்பித்திருக்கும் பெற்றோர்கள் அதனை மீட்டுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சில பெரியவர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அழைப்பிதழைப் பெற்றிருந்தால், அதனையும் ரத்து செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
தவறுதலாக அழைப்பு அனுப்பப்பட்டதற்கு அமைச்சு வருத்தம் தெரிவிப்பதாகவும் அதனை தனது மை செஜாத்ரா தொழில்நுட்பக் குழு சரி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =