மை-சினர்ஜி நிகழ்வில் மனிதவள அமைச்சர்

0

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸாவும், மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனும் நேற்று இங்கு நடைபெற்ற ‘மை-சினர்ஜி’ நிகழ்வில் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர். இவ்வைபவம் மாட்ரெட் கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வை சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (பெர்கெசோ), நிதியியல் நிர்வாக ஆலோசனை நிறுவனம் (ஏ.கே.பி.கே.), கியாட் மாரா, அமானா இக்தியார் மலேசியா (ஏய்ம்), மலேசிய இலக்கவியல் நிறுவனம் (எம்-டெக்) ஆகியவற்றின் ஒத்துழைப்போடு நடத்தியது. பெர்கெசோ நஷ்ட ஈடு பெறுவோரின் பொருளாதார தரத்தை உயர்த்துவதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


சமூக பாதுகாப்பு நிதி, உண்மையில் தேவைப்படும் மக்களைச் சென்றடைவதும், நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதாக குலசேகரன் தமதுரையில் குறிப்பிட்டார்.
பெர்கெசோ நஷ்ட ஈடு, உண்மையில் பாதிக்கப்பட்ட பி40 வர்க்க மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று துணைப் பிரதமர் வான் அஸிஸா வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − five =