மைசெஜாத்ராவில் பதியாதவர்களுக்கு அபராதம்

0

மைசெஜாத்ரா செயலி மூலம் தங்களது பெயர்களையும் தொலைபேசி எண்களையும் பதிவுசெய்து கொள்ளாத ராஜா ஊடா வர்த்தக மையத்திலிருந்த 5 ஆடவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட செபெராங் பிறை வட்டார காவல்துறை தலைவர் உதவி கமிஷனர் நூர்ஸாய்னி முகமட் நூர் கூறினார். அபராதம் விதிக்கப் பட்டவர்கள் அந்த உணவகத்தின் உரிமையாளர், வாடிக்கையாளர்கள், உபசரிப்பாளர்கள் ஆவர்.
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர். தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளாதவர்களின் மீது உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் அவர்கள் நலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகளைப் பின்பற்றாததால், இந்த உணவகத்தை 7 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + seventeen =