மைக்ரோசாஃப்ட் நிர்வாக குழுவில் இருந்து விலகினார் பில் கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிர்வாக குழுவில் இருந்து துணை நிறுவனர் பில் கேட்ஸ் விலகிவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் அன்றாட பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்து பில் கேட்ஸ் ஏற்கனவே விலகி தன் மனைவியுடன் இணைந்து துவங்கிய அறக்கட்டளை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் பின் 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக பில் கேட்ஸ் இருந்து வந்தார்.
“கடந்த ஆண்டுகளில் பில் கேட்ஸ் உடன் பணியாற்றியது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பில் கேட்ஸ் இந்த நிறுவனத்தை மென்பொருள் ஆற்றலை ஜனநாயகப்படுத்தும், சமுதாயத்தின் பெரும் சவால்களை தீர்க்க வழி செய்யும் நம்பிக்கையில் துவங்கினார்” என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாடெல்லா தெரிவித்து இருக்கிறார். 

மைக்ரோசாஃப்ட்

‘தொழில்நுட்ப ஆலோசகரான பில் கேட்ஸ் அறிவுரைகளை கேட்டு மைக்ரோசாஃப்ட் பயன்பெறும் என நாடெல்லா மேலும் தெரிவித்தார். பில் கேட்ஸ் உடனான நட்புக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து 2000 ஆண்டு பில் கேட்ஸ் விலகினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − six =