மைக்கா முதல் மித்ராவரை…

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வாரியத்தின் துணைத்தலைவர் திலகனின் பேரன் 3-ஆம் வகுப்பு மாணவன் சச்சின் செல்வம் அன்வார் இப்ராஹிமிற்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு உங்களை விரைவில் பிரதமராக பார்க்க ஆசைப்படுகின்றேன் என்றார். அவரிடம் நீ என்னவாக விரும்புகிறாய் என்று அன்வார் கேட்டப்பொழுது நான் இந்நாட்டின் போலீஸ் படைத் தலைவராக விரும்புகின்றேன் என்று போலீஸ் சல்யூட் அடித்து கூறினான். அதற்கு அன்வார் ஒரு நேர்மையான போலீஸ் படைத்தலைவராக வேண்டும் என்று வாழ்த்தினார். இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக மைக்கா தொடங்கப்பட்டது. ஏழை மக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அது அம்மக்களுக்கு பயன் தராமலே போனது. இப்போது அரசு இந்தியர்களின் சமுக மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு 10 கோடி ரிங்கிட்டை ஓதுக்கியது. அந்நிதி சம்பந்தமாக இப்போது பெரும் சர்ச்சை எழுந்தது. மைக்கா முதல் மித்ராவரை இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் அனைத்தும் ஒரு சிலரின் பேராசையால் பயனற்றுப் போகின்றது. ஏழைகளுக்கு வழங்க வேண்டிய நிதி சில தலைவர்கள் சுயநலத்திற்கு சென்றடைந்துள்ளது. இது போன்ற முறைகேடு நடைபெறுவதை மக்கள் வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது. அதற்கான தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென பிகேஆர் கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மலேசிய சமுக நல மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்வார் அதனை கூறினார். அரிமா உட்பட பல சமுக அமைப்பின் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அரசு மக்களுக்கு வழங்குகின்ற சலுகைகள் முறையாக அவர்களுக்கு சென்றடைவதை அரசும் தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார். அனைவரையும் வரவேற்றுப் பேசிய ஓம்ஸ் தியாகராஜன் எழுச்சி மிக்க இளைஞர்களுடன் மஇகாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களையும் மற்றும் வெளியேறியவர்களையும் கொண்டு அரிமா தொடங்கப்பட்டது. மேலும் பல நல்ல சேவையாளர்கள் சேவை செய்வதற்கு தளம் இல்லாத நிலையில் இருப்பவர்களையும் வைத்து அரிமா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இவர்களைக் கொண்டு கிளைகளை அமைத்து தற்போது மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். அன்வார் இப்ராஹிம் வந்தவுடன் ஓம்ஸ் தியாகராஜனின் புதல்வர் டாக்டர் ஈஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பத்மநாதன் குமரசாமி தனது பெற்றோருடன் மாலை அணிவித்தார்.டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு ரவாங் எஸ். பி. கேர் மருத்துவ மைய நிறுவனர் டாக்டர் சத்திய பிரகாஷ் தலைமையில் மருத்துவ பணியாளர்கள் மாலை அணிவித்து கௌரவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 1 =