மே 13 கலவரம் மீண்டும் வெடிக்கும்: அஸ்வாண்டின் குற்றஞ்சாட்டப்பட்டார்

1969 மே 13 கலவரம் போன்று மீண்டும் வெடிக்கும் என அச்சுறுத்தல் விடுத்திருந்த அஸ்வாண்டின் ஹம்ஸா மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாரிங்கான் மெலாயு மலேசியா இயக்கத்தின்(ஜேஎம்எம்) தலைவரான அஸ்வாண்டின் ஹம்ஸா(வயது 47) அக்குற்றத்தை 2018 நவம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் மெனாரா ஏ பாண்டான் இண்டா, 11ஆவது மாடியில் உள்ள என்டிஎச் மீடியா அலுவலகத்தில் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிய தூண்டியதாகவும் அவர் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 505(பி)இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டுமே ஒரு சேர விதிக்கப்படலாம். 5,000 ரிங்கிட் பிணையிலும் ஒருவர் உத்தரவாதத்தின் பேரிலும் அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கின் முதல் வாசிப்பு மார்ச் 13ஆம் தேதி வரும் என மாஜிஸ்திரேட் நோர்மைஸான் ரஹிம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 4 =