மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞர்: சமூக ஊடகங்களில் பரவும் செய்தி

0

திருப்பூர்

திருப்பூரில் மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞர் ஒருவர் காயங் களுடன் உயிர் தப்பினார். அவர் கீழே விழுந்த சம்பவம் தொடர் பான வீடியோ பதிவு சமூக ஊடகங் களில் பகிரப்பட்டு வருகிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர் சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த பாலத்தின் மேலே ஏறி மையப்பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென பக்கவாட்டு தடுப்பு சுவரைத் தாண்டி, விளிம்பில் அமர்ந்து சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் கீழே குதிக்க பார்த்துக் கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை கீழே இறங்க கூச்சல் போட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென கீழே சென்ற அரசு பேருந்தின் மீது குதித்தார். தொடர்ந்து பேருந்தின் மேற்பரப்பிலிருந்து சாலையில் விழுந்தவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

பொதுமக்கள் அவரை மீட்டு தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடி பகுதியை சேர்ந்த ஆர்.சரத் குமார் (28) என்பது தெரிந்தது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸார் உறவினர் களுடன் அனுப்பி வைத்தனர்.

போலீஸார் கூறும் போது, ‘ ஓட்டுநர் வேலை செய்துவந்த அவர், மனநிலை பாதிப்பு காரணமாக திருப்பூரில் உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்’ என்றனர். அவர் பாலத்திலிருந்து பேருந்து மீது விழுந்ததை அவ்வழியே காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்தது, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + nineteen =