மூளி ஆகும் மலைகள்; பினாங்குஅரசு பாராமுகம் !

0

பினாங்கு மாநிலத்தில் தெலுக் பகாங் என்ற இடத்தில் நடைபெறும் மலைகளைச் சிதைக்கும் சட்டவிரோத கல்லுடைப்பு நடவடிக்கைகளில் பினாங்கு அரசாங்கம் பாராமுகம் காட்டுகிறது என்று ’சஹாபாட் அலாம் மலேசியா என்ற மண்ணின் தோழர்கள் கழகத்தின் தலைவர் மீனாட்சி ராமன் கூறினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அப்படி இருந்தும் மாநில அரசு அதைக் கண்டும் காணாமல் இருந்து வருவது ஏன் என அவர் வினவினார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அப்படி இருந்தும் மாநில அரசு அதைக் கண்டும் காணாமல் இருந்து வருவது ஏன் என அவர் வினவினார்.
நேற்று தி ஸ்டார் ஆங்கில நாளிதழ் இந்த இயற்கைச் சிதைவை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இந்தக் கல்லுடைப்பை நிறுத்துமாறு பினாங்குத் தீவு நகராண்மைக் கழகம் கடந்த பிப்ரவரி மாதத்திலும் மே மாதத்திலும் உத்தரவிட்டும் இந்நடவடிக்கை தொடர்வதாகக் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தையும் உத்தரவையும் மீறிச் செயல்படும் கல்லுடைப்பு நிறுவன விவகாரத்தில் உடனடி நடவடிக்கையை பினாங்கு அரசு மேற்கொள்ளவில்லை என்று மீனாட்சி தெரிவித்தார்.
மேலும் 250 அடி (76 மீட்டர் ) உயரத்தில் மலையில் இந்த கல்லுடைப்பு நடப்பது சட்டத்திற்கு முரணாக உள்ளது. குறிப்பாக 120 மீட்டர் உயரத்தில் மலையில் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டிச் சாய்க்கப் பட்டிருக்கின்றன. அது ’மொட்டை மலை 2 என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 பொதுத்தேர்தலின் போதே புக்கிட் ரிலாவ் என்ற இடத்தில் இதேபோன்ற மலைகள் சிதைக்கப்பட்டிருந்தன. சுற்றுச்சூழலுக்கும் பசுமைக்கும் எதிரான ஒரு காரியத்தை அந்த சட்டவிரோத கல்லுடைப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. முறைப்படி அந்த நிறுவன உரிமையாளரை நீதிமன்றத்தில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + thirteen =