மூலப்பெருந்தமிழ் வானியல் அறிவறிதல் நூல் அறிமுகம்!

தமிழியல் ஆர்வலர்களிடையில் நன்கு அறிமுகமான மலேசியத் தமிழறிஞரும் நாற்பது ஆண்டுகள் தமிழியல் ஆய்விற்கு தன் வாழ்நாளை ஈகம் செய்து பல நூல்களை எழுதியவருமான தமிழ்த்திரு இர. திருச்செல்வனார் ‘மூலத்தமிழ் வானியல் அறிவறிதல்’ என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். மலேசியத் தமிழர் தேசியப் பேரவை அந்நூலை உலக வாழ் தமிழர்களுக்கு இயங்கலை வாயிலாக அறிமுகம் செய்யவிருக்கிறது. மலேசியாவில் உள்ள தமிழியல் சார்ந்தவர்களும் ஆர்வமுள்ளவர்களும் இயங்கலை வழியாக நடைபெறும் மூலத்தமிழ் வானியல் அறிவறிதல் நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தும், தமிழர் வாழ்வியலில் இரண்டற கலந்த வானியல் அறிவியலைப் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும் என்று மலேசியத் தமிழர் தேசியப் பேரவை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது. இவ்வறிமுக விழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இயங்கலைப் படிவத்தின் வழிhttps://tinyurl.com/yremxhwx வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏற்பாட்டுக்குழு நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்கான இணைப்பை பங்கேற்பாளர்களுக்கு அனுப்பி அனுப்பி வைப்பார்கள். மேலும் முகநூலில் மலேசியத் தமிழர் தேசியப் பேரவைப் (Pertubuhan Tamil Tesiyam Malaysia) பக்கத்திலும் கூகுள் மின்னியல் படிவத்திற்கான இணைப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அல்லது நிகழ்வு பொறுப் பாளர்களின் புலனம் வாயிலாகத் தொடர்புகொண்டு வருகையை உறுதி செய்வதற்கான இயங்கலை பதிவு படிவத்தின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: தமிழரண் (தலைவர்) 018-7732521 பாலமுரளி (துணைத் தலைவர்) 013-6320587, தமிழகரன் (செயலாளர்) 016-4196429

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =