மூன்று வாரங்களாக மின் வெட்டு டுசுன் டுரியான் தோட்ட பாட்டாளிகள் அவதி

இங்கு மோரிப் சாலையில் நூறாண்டுக்கும் மேலாக இருக்கும் டுசுன் டுரியான் தோட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக வீடுகளில் மின் தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில் தோட்டப் பாட்டாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிஎன்பி என்ற மேம்பாட்டு நிறுவனம் இந்தத் தோட்டத்தை வாங்கி விட்டதால் இந்த மின் வெட்டு நடவடிக்கைகள் மட்டுமில்லாமல் மற்ற செயல் திட்டங்களும் இங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த த் தோட்டத்தில் தற்போது 24 இந்திய க் குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் வசித்து வருகின்றனர். இந்த மின் வெட்டு ச் சம்பவம் மற்றும் குடிநீர் த் துண்டிப்பு இப்போது புதிதாக நடப்பதல்ல. இது பலமுறை இங்கு நடைபெற்று வருவதாகவும் சொல்லப் படுகிறது. பல சமூக ஆர்வலர் களும் அரசியல் தலைவர்களும் களத்தில் இறங்கி இப்பிரச்சினை க்குத் தீர்வு காணும் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்தத் தோட்டப் பாட்டாளி களின் கனவு இல்லமான சொந்த வீட்டுடைமைத் திட்டம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அது முற்றுப் பெறாத நிலையில் இன்று காடு மண்டி கிடக்கிறது. கைக் குழந்தைகள் சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் இவர் கள் தோட்ட வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் மின்சார வசதி யின்றி கடந்த மூன்று வாரங்களாக இருளில் கொசுக் கடியில் உறங்கி நாளை க் கடத்தி வருகின்றனர். தற்போது இவர் கள் குடியிருக்கும் தோட்ட வீடுகளும் நாளை ஒருநாள் உடைபடும் அபாயம் இருப்பதாக வும் சொல்லப் படுகிறது. இந்த நிலையில் மோரிப் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் நேற்று முன்தினம் 23.9.2021 நேரில் சென்று தோட்ட ப் பாட்டாளி களிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார். தற்காலிக நிவாரணமாக உடனடியாக மின் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பாட்டாளிகள் முறையிட்டனர். இது குறித்து தேசிய மின் வாரிய அதிகாரிகளைச் சந்தித்து ப் பேசுவதாக அவர் தெரிவித்தார். தோட்ட மக்கள் இங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமத்து வீடுகளில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஆறு மாத வாடகை மற்றும் இன்ன பிற செலவுகளை தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் ஆலோசனை கூறினார். பல சிக்கல்கள் நிறைந்துள்ள இந்த த் தோட்ட ப் பாட்டாளி கள் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதில் இழுபறி நிலை உருவாகலாம். எனினும் இதில் தொடர்பு டைய அனைவரும் முன் வந்து பங்கேற்று சுமூகமாக ப் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே இவர்களின் கவலைகளுக்கு ஒரு நிரந்தர முடிவு பிறக்கும் என்று மாநில துணை சபா நாயகருமான ஹஸ்னுல் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − one =