மூன்று மாநிலங்களில் அம்னோ மூட்டைக் கட்ட வேண்டியதுதான்!

முவாபாக்காட் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி யில் இடம் பெற்றுள்ள உறுப்புக் கட்சிகளுடன் பேசிய பிறகுதான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு காணப்பட வேண்டும் என்று அம்னோ துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி தனது பேராளர் கூட்டத்தில் அல்லது ஆண்டு மாநாட்டில் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். ஆனால், தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து உறுப்புக் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகுதான் இணக்கம் காண வேண்டும் என்று அவர் சொன்னார்.
கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள தொகுதிகள் குறித்து தனது கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்கப்படாமல்
முடிவு செய்வதை
தன்னிடமே விட்டுவிட வேண்டுமென பாஸ் கூறியுள்ளது. அந்த மூன்று மாநிலங்களையும் பாஸ் கட்சியிடம் ஒப்படைத்துவிடுவது சரியானது அல்ல.
பாஸ் கட்சி கேட்பதை எல்லாம் ஒப்புக்கொண்டால் அந்த மூன்று மாநிலங்களிலும் அம்னோ அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் எச்சரித்தார்.
கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மூன்று மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் முடிவு செய்யும் உரிமையை பாஸ் கட்சியின் வசம் முழுமையாக விட்டுவிட வேண்டும் என அண்மையில் பாஸ் கட்சி பேராளர் மாநாட்டில் அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹடி அவாங் கூறியுள்ளார்.
பாஸ் கோரிக்கையை முன்வைக்கலாம். ஆனால் தொகுதிகள் பங்கீடு குறித்து அம்னோ இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =