மூத்த தமிழ் எழுத்தாளர் கமலாட்சி ஆறுமுகம் நூல்கள் அன்பளிப்பு

0

நாட்டின் புகழ்பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் கமலாட்சி ஆறுமுகம் தன்னிடம் இருந்த நூற்றுக்கு மேலான புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
86 வயதுடைய அவர், 14 வயதிலிருந்து எழுதத் தொடங்கியவர் இன்றும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். இதுநாள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை தமிழ் சமூக இயக்கங்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகிறார்.
மேலும், உப்சி பல்கலைக் கழகத்திற்கு 180, ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்திற்கு 145, பேராக் மாநில எழுத்தாளர் சங்கத்திற்கு 94, தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கத்திற்கு 50 புத்தகங்கள் வழங்கினார்.
இந்த புத்தகங்களை உப்சி பல்கலைக் கழகத்தின் இணை பேராசிரியர் சாமிக்கண்னு, ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்விக் கழகத்தின் முனைவர் மோகன் குமார் நேரடியாக கமலாட்சி ஆறுமுகத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, தாம் படித்து ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளிக்கும் , ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி, ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவில் உள்ள நூல் நிலையத்திற்கும் புத்தகங்கள் வழங்குவதாக கமலாட்சி ஆறுமுகம் தெரிவித்தார்.
ஈப்போ துன் ரசாக் நூல்நிலையத்தில் இந்தியர்கள் அதிகமாக வருகையளிக்க கடந்த 18 வருடங்களாக கதை சொல்லும் வகுப்பை கமலாட்சி ஆறுமுகம் நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − five =