முகவலைத்தளங்களில் மதம் சார்ந்த சர்ச்சைகளின் பதிவு உயர்வு

0

‘எஸ்கேஎம்எம்’ எனப்படும் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் மேற்கொண்ட ஆய்வின்படி சமூக வலைத் தளங்களில் 80 விழுக்காடு மதம் சார்ந்த விவகாரங்களே சர்ச்சைக்குள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது.


பெரும்பாலான சமூகவலைத்தளங்களில் மற்ற மதங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிடுதல், மற்ற மதங்கள் குறித்த தவறான கேலிச்சித்திர ஓவியம், அரசர் – மாமன்னர் ஆகியோரைப் பற்றிய இழுக்கான தகவல் பரிமாற்றம் ஆகிய குற்றங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று அமைச்சின் துணையமைச்சர் எடின் ஷாஸ்லியின் பிரதிநிதியான டத்தோஸ்ரீ நான்ஸி சுக்ரி தெரிவித்தார்.


கடந்த மாதம்வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதம் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பி இதுவரை 21,296 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 19,968 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் வேளையில், இதர 259 புகார்களுக்கு உரிய தீர்வும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தை களைவதற்காக தகவல், பல்லூடக அமைச்சு
பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங் களையும் கலந்தாலோசிப்புக் கூட்டங்களையும் அவ்வப்போது நடத்திய வண்ணமாக உள்ளது.
இருந்தபோதிலும் சில பொறுப்பற்ற தரப்பினர் இவ்வகைத் தவறுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அத்தகையோர் அடையாளம் காணப்பட்டால் சைபர் குற்றவியல் வழக்கின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − eleven =