முஹிபா குடியிருப்புப் பகுதியில் திடீர் வெள்ளம்: சிரமத்தில் மக்கள்

ஜாலான் மஹாராஜா லேலா 6 வது மைல், தாமான் டேசா அமானை ஒட்டியுள்ள முஹிபா குடியிருப்புப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் ஏற்பட்ட வெள்ளத்தினால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
அருகில் உள்ள பேராக் ஆற்று அணை உடைந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்கு பேரா அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் சேதம் அடைந்துள்ளதாக சரஸ்வதி, மரகதம், பிளாஸி ஜோன், கத்தே ரகுபதி, மனோன்மணி ஆகியோர் தெரிவித்தனர். இப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இது வரையில் முயற்சிக்காமல் இருப்பது குறித்து மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மஇகா சார்பிலும் தலைவர்கள் வந்து மக்களை சந்திக்கவில்லை. தேர்தல் வந்தால் மட்டும் அழையா விருந்தாளியாக அரசியல்வாதிகள் வந்து வாக்களிக்க கேட்பார்கள். நாங்களும் ஏமாளித் தனமாக நம்பி வாக்களித்து வெற்றி அடையச் செய்கின்றோம் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + six =