முஹிடின் சர்வாதிகாரியாகச் செயல்பட வேண்டாம்

    நாட்டில் அவசரகால பிரகடனத்தைச் செய்வது சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடும் என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார். அவசர காலத்தைப் பிரகடனம் செய்வதற்கு அமைச்சரை ஒப்புதல் கொடுத்த செயலானது தன்மூப்பானது என்றும் கோவிட்-19 நோயைக் காரணம் காட்டுவது நொண்டிச்சாக்கு என்றும் அவர் சாடினார்.
    பொதுவாக நாட்டின் பாதுகாப்புக்குக் கடும் மிரட்டல் ஏற்பட்டு நெருக்கடி நிலை உருவானால் மட்டுமே அவசர காலம் பிரகடனப்படுத்த முடியும்.
    அரசே நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக உருவாகும்போது, தனது பதவியையும் ஆட்சியையும் தற்காத்துக் கொள்ள சர்வாதிகார ஆட்சியக் கையில் எடுத்துக் கொள்ள பிரதமர் முனைகிறார் என்று கருத வாய்ப்பிருக்கிறது.
    அவசரகால பிரகடனத்தை அறிவிப்பதை முஹிடின் யாசின் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று அன்வார் வலியுறுத்தினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    thirteen − 1 =