முஹிடினை துரோகி என்று சொல்வதில் நியாயமில்லை

பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டான்ஸ்ரீ முஹிடினை துரோகி என்று வர்ணிப்பதில் நியாயம் இல்லையென பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் குறிப்பிட்டார். நாட்டில் நிகழ்ந்த அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரவே அவர் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகச் சுட்டிக் காட்டினார். பிரதமர் பதவிக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது அதனை அவர் ஏற்றுக் கொண்டார். அந்தச் செயலானது பக்காத்தான் கூட்டணிக்குச் செய்த துரோகம் என பொருள் கொள்ளக்கூடாது. நாட்டின் நலனை முன்னிட்டே அவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அதனை மக்கள் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். பதவியேற்பில் உரையாற்றிய முஹிடின், ஊழலற்றவர்களை மட்டுமே தமது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் போவதாகவும் ஊழல் ஒழிப்பு, அதிகாரத் துஷ்பிரயோகம், அமலாக்கத்தை பலப்படுத்துதல், தேவையற்ற சட்டங்களைத் திருத்தம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளப் போவதாகக் கூறியிருப்பதைப் பாராட்டி இருக்கும் துவான் இப்ராஹிம், அவற்றைச் செய்ய முஹிடினுக்கு பரந்த அனுபவம் இருப்பதாகத் தெரிவித்தார். அது பற்றிக் குறிப்பிட்ட மாரா பல்கலைக்கழக பேராசிரியர் இஸ்மாயில் சுவால்மான், முஹிடினுக்கு ஒரு வாய்ப்பைத் தர மக்கள் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அவர் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + twelve =