முஹிடினுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!

பிரதமர் என்ற நிலையில் தம்மை நிரூபிக்க புதிதாக நியமனம் பெற்ற டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறினார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதில் முஹிடின் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

புதிய பிரதமர் என்ற வகையில் தமது ஆற்றலை நிரூபிக்க அந்த பெர்சத்து தலைவருக்கு கால அவகாசம் வழங்கப்படுவதே பொருத்தமான ஒன்று என அவர் சொன்னார். நேற்று இங்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அம்னோ தலைவருமான நஜிப் பதிலளித்தார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் சமாளிப்பாரா என்ற கேள்விக்கு, “எங்களுக்கு போதுமான எண்ணிக்கை உண்டு என நம்புகிறோம்” என்றார் அவர். இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தில்தான் தற்போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 8ஆவது பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அமாட் ஷா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + seventeen =