முஹிடினுக்கு ஆதரவு இல்லை

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் அரசாங்கத்திற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெளிவுபடுத்தினார்.கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நஜிப் துன் ரசாக்கின் ஊழல்மிக்க அரசாங்கத்தைக் கவிழ்த்த மக்களுக்கு துரோக மிழைக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“முஹிடினுடன் ஒத்துழைக்கும்படி பலர் என்னைக் கேட்டுக் கொண்டனர். நஜிப்பின் ஊழல் மிக்க அரசாங்கத்தைக் கவிழ்க்க முஹிடினுடன் இணைந்து நான் பெர்சத்து கட்சியை அமைத்தேன்” என்றார் அவர்.
மக்கள் எங்களை நம்பி பக்காத்தான் ஹராப்பானில் உள்ள எங்கள் நண்பர்களுக்கும் வெற்றியைத் தந்தனர் என அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தாம் பிரதமராக இருந்தபோது அமைச்சரவையில் ஜசெக ஆதிக்கம் செலுத்தவில்லை என லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான மகாதீர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =